» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம்

வெள்ளி 19, மே 2017 8:02:25 PM (IST)தூத்துக்குடி ஆசீர் மாருதி நிறுவனம் சார்பில் புதிய மாருதி டிசையர் கார் அறிமுகவிழா இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி ஆசீர் மாருதி நிறுவனத்தில் புதிய மாருதி டிசையர் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா இன்று மாலை தூத்துக்குடி டி.எஸ்.எஃப். கிராண்ட் பிளாசாவில் வைத்து நடைபெற்றது. விழாவில் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் வரவேற்றார். ஸ்டேட் பாங்க் உதவி பொதுமேலாளர் கண்ணன் ராஜா, டி.எஸ்.எஃப். பால்பாண்டி, ஜோ.வில்லவராயர், மங்கள்ராஜ், ஜெயக்கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதிய மாருதி டிசையர் கார் குறித்த தகவல்களை நிர்வாக மேலாளர் ஜஸ்டின் விளக்கினார். புதிய மாருதி டிசையர் கார் ஹேர்ட்டெக் (HEARTTECT) என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இலகு எடை கொண்டதாகவும், அதிக உறுதிமிக்க கட்டமைப்புடன் வந்துள்ளது. வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் உட்புறத்தில் இடவசதி மேம்பட்டுள்ளது. காரின் முகப்பு, பக்கவாட்டு டிசைன் மற்றும் பின்புற டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. 

இதனால், பழைய காரிலிருந்து அதிக வேறுபாடு கொண்ட மாடலாக மாறி இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற பல சிறப்புகளை பெற்றிருக்கிறது. 15 இன்ச் டைமன் கட் அலாய் வீல்களும் வெளிப்புற டிசைனுக்கு கவர்ச்சி சேர்க்கிறது. உட்புறத்தில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. இது ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் போன்றவை மிக முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

புதிய மாருதி டிசையர் காரில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் இடம்பெற்றிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பேஸ் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.40 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. புதிய மாருதி டிசையர் காரின் டீசல் மாடல்தான் இப்போது இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. புதிய மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. பின்புற இருக்கைகளில் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட்டை பொருத்தும் பாதுகாப்பு வசதியும் இருக்கிறது.

வேரியண்ட் எக்ஸ்ஷோரூமின் விலை [தூத்துக்குடி] எல்எக்ஸ்ஐ ரூ.5.48 லட்சம், விஎக்ஸ்ஐ ரூ.6.40 லட்சம் விஎக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் ரூ.6.88 லட்சம், இசட்எக்ஸ்ஐ ரூ.7.10 லட்சம், இசட்எக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் ரூ.7.58 லட்சம் இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ரூ.8.01 லட்சம், இசட்எக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.8.49 லட்சம், வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி] எல்டிஐ ரூ.6.97 லட்சம், விடிஐ ரூ.7.36 லட்சம், விடிஐ ஆட்டோமேட்டிக் ரூ.7.84 லட்சம், இசட்டிஐ ரூ.8.13 லட்சம், இசட்டிஐ ஆட்டோமேட்டிக் ரூ.8.61 லட்சம், இசட்டிஐ ப்ளஸ் ரூ.9.04 லட்சம், இசட்டிஐ ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.9.52 லட்சம், ஆகிய விலைகளில் கிடைக்கிறது என்றார். அறிமுக விழா ஏற்பாடுகளை தலைமை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன், உதவி பொதுமேலாளர் பூமிநாதன், விற்பனை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals
Thoothukudi Business Directory