» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இணையதள காவல் சேவை திட்டம் அறிமுகம்: எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் பேட்டி

வெள்ளி 19, மே 2017 4:05:37 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதளம் வாயிலாக போலீஸ் பொதுமக்களிடையே தகவல் பரிமாற்றத்திற்காக "ஒருங்கிணைந்த இணையதள காவல் சேவை" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள், குற்றவாளிகளைப் பற்றிய இரகசிய தகவல்கள், ஆட்கடத்தல், போதை பொருள் கடத்தல், திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் போக்குவரத்துக் குற்றங்கள் குறித்த இரகசிய தகவல்களை சம்பந்தபட்ட காவல்நிலையங்களில் வாட்ஸ் அப் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்த முறையை ஒருங்கிணைத்து நவீனப்படுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக 94898 86262 என்ற பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், www.thoothukudipolice.com என்ற இணயதளத்தின் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிவிக்கலாம்.  இந்த திட்டத்தின் தலைவராகவும், கண்காணிப்பாளராகவும் தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் செயல்படுவார். 

மேலும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தையும் ஒருங்கிணைத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள Facebook Id "TAMILNADU POLICE" என்ற திட்டத்திற்கு முன்னோடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் thoothukudi-district-police என்ற Facebook Id உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Id-யில் messenger மூலமாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட காவல்துறையின் வரவேற்புகளுக்கு Likes, Shares, Comments வரவேற்கப்படுகிறது. பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து தகவல்களும் இரகசியமாக வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்..


மக்கள் கருத்து

M.sundaramமே 20, 2017 - 05:24:14 AM | Posted IP 117.2*****

Good. But it should function properly.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Panchai Dairy

Johnson's Engineers

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


Black Forest Cakes

New Shape Tailors

CSC Computer Education






selvam aqua



Thoothukudi Business Directory