» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் அதிநவீன உடற்பயிற்சிகூடம் அமைக்க ஏற்பாடு : மாநகராட்சி ஆணையர் தகவல்

வெள்ளி 19, மே 2017 2:43:10 PM (IST)



துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அதிநவீன உடற்பயிற்சிகூடம் அமைக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படுமென மாநகராட்சி ஆணையர் ராஜாமணி தெரிவித்தார்.

தூத்துக்குடி ரோச்பூங்காவில் உடற்பயிற்சி கூடத்தை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார். இதில் கலந்து கொண்டு துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ராஜாமணி தெரிவித்ததாவது, ரோச்பூங்காவில் இன்று உடற்பயிற்சி கூடம் திறந்தது மகிழ்ச்சிளிக்கிறது. இதற்கு அருகிலேயே மாநகராட்சி செலவில் இந்த உடற்பயிற்சிகூடத்தை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது இது போன்ற உடற்பயிற்சிகூடங்கள் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் மற்றும் காவல்துறையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஆணழகன் போட்டியில் துாத்துக்குடி 3 வது இடம் பிடித்துள்ளது. தேசிய அளவிலான உடற்பயிற்சி போட்டிகளில் தமிழ்நாட்டுக்கும் பஞ்சாப்க்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது.

எனவே இளைஞர்கள்,உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களுக்காக துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அதி நவீன உபகரணங்கள் கொண்ட சிறந்த உடற்பயிற்சி கூடம் திறக்க துாத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.இதற்கான நிதி திரட்ட துாத்துக்குடியிலுள்ள பெரிய தனியார் நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் நிதி திரட்டி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals








Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory