» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரோச் பூங்காவில் உடற்பயிற்சி கூடம்: சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்

வெள்ளி 19, மே 2017 11:57:59 AM (IST)



தூத்துக்குடி ரோச் பூங்காவில் உடற்பயிற்சி கூடத்தை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள ரோச் பூங்காவில் 2015-16 சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ராஜாமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக அம்மா அணி மாவட்டச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

விழாவில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மாநகராட்சி செயற்பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சுப்புலட்சுமி, இளநிலை பொறியாளர் பாண்டி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்  பிடிஆர் ராஜகோபால், கிழக்குப் பகுதி செயலளார் எட்வின் பாண்டியன், தெற்கு பகுதி செயலளார் பிஎன் ராமகிருஷ்ணன், உள்ளூர் திட்டக்குழும முன்னாள் உறுப்பினர் ஞாயம் ரொமால்டு,  முன்னாள் துணைச் சேர்மன் மனோஜ்குமார், கேடிசி சங்கரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

Nanbanமே 19, 2017 - 12:59:28 PM | Posted IP 157.5*****

முதலில் ரோச் பூங்காவில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சொல்லுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Universal Tiles Bazar




selvam aqua



Thoothukudi Business Directory