» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரவுடி கொலை வழக்கில் பில்லா ஜெகன் தம்பி உட்பட 2பேர் கைது

வியாழன் 18, மே 2017 12:16:05 PM (IST)

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகனின் தம்பி உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

துாத்துக்குடி மட்டக்கடை பஜார் காளியப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன் (45). இவர் துாத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். மேலும் திமுகவில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ,,வின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவரது மகள் நெல்லையில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருகிறார். பில்லா ஜெகன் மகளுக்கு அதே தெருவை சேர்ந்த பிரபல ரவுடியான சச்சின் (26) என்பவர் ஒருதலையாகக் காதலித்து, தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பில்லா ஜெகன் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சச்சினை பில்லா ஜெகன் உட்பட 8பேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக பில்லா ஜெகன், அவரது தம்பிகள் சுமன், சிம்சன், மற்றும் திருச்சிற்றம்பலம், பாலா, வின்னர் கார்த்திக், சின்னதுரை, எடிசன், ஆகிய 8பேரை போலீசார் தேடி வந்தனர். இன்று காலை பில்லா ஜெகன் தம்பி சிம்சன் (26), தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் எடிசன் (27) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

gladsonமே 20, 2017 - 09:26:31 PM | Posted IP 107.1*****

எங்கள் அண்ணண் பில்லா ஜெகன் என்றும் தவறு செய்ய மாட்டார்...அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அர்த்தம் உண்டு

Sureshமே 18, 2017 - 02:51:34 PM | Posted IP 27.62*****

சார் Billa Jegan பெரிய rowdy Thana

அந்தோணிமே 18, 2017 - 01:29:38 PM | Posted IP 115.2*****

அட பாவிங்களா !!! அவன் ரவுடி நீங்க பார்த்தங்களா, அவன் நல்ல பையன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Universal Tiles Bazar

Black Forest Cakes

CSC Computer Education


Johnson's Engineers


Pop Up Here


Nalam Pasumaiyagam

New Shape Tailors

selvam aqua




Thoothukudi Business Directory