» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியற்ற வீட்டுமனை பதிவுசெய்ய அரிய வாய்ப்பு : பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியர்

வியாழன் 18, மே 2017 8:36:31 AM (IST)

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு மனைகளை பத்திரப்பதிவு செய்திடவும், விற்பனை செய்திடவும்  அரசால் அளிக்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் மற்றும் உள்பிரிவு வரைமுறைப்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கே. ராஜாமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: தமிழ்நாடு அரசு நகர் ஊரமைப்புத் துறை தொழில்நுட்ப அனுமதியின்றி அபிவிருத்தி செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளாகும். அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப்பதிவுக்கு தடையேற்பட்டுள்ள நிலையில், மனைகளை வரன்முறைப்படுத்திட ஏதுவாக தமிழ்நாடு அரசு புதிதாக வழிகாட்டுதல்கள் அளித்து அரசாணை மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையின்படி 20.10.2016-க்கு முன்னர் பத்திர பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுகளை மட்டும் முறைப்படுத்திட அரசினால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற மனைப்பிரிவு அபிவிருத்தி செய்தவர்கள் மற்றும் மனைப்பிரிவு மனைகளை கிரையம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசாணையின்படி உடனடியாக தங்களது மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான உரிய கட்டணம் செலுத்தி முறைப்படுத்திட ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டு அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவு விவரங்களை அளித்திட வேண்டும். உள்ளாட்சிகளால் கோரப்படும் ஆவணங்களை உடனடியாக அளித்து வரன்முறை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 20.10.2016-க்கு முன்னர் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அரசாணையில் கண்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்தப்படும்.

அரசாணையின்படி வரன்முறைப்படுத்தப்படாத மனைகளில் ஏற்கெனவே கட்டடம் கட்டப்பட்டிருப்பினும் அம்மனைகளுக்கும் வரன்முறைப்படுத்துதல் உத்தரவு பெறப்பட  வேண்டும். மறுவிற்பனைக்கான பத்திரப்பதிவுக்கு வரன்முறை உத்தரவு கட்டாயமானதாகும். வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு கட்டட அனுமதி, குடிநீர்வசதி, மின்வசதி, கழிவுநீர் வசதி ஆகியன இனி வருங்காலங்களில் உள்ளாட்சிகளால் அளிக்கப்பட மாட்டாது.  வரன்முறைப்படுத்தப்படாத மனைகளை பத்திர பதிவு செய்து மறுவிற்பனை செய்வதற்கும் வழிவகை இல்லை. எனவே, அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு மனைகளை பத்திரப்பதிவு செய்திடவும், விற்பனை செய்திடவும் ஏதுவாக வரன்முறைப்படுத்திட அரசால் அளிக்கப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் பயனடையலாம் என்றார்.


மக்கள் கருத்து

சரவணன்Apr 27, 2018 - 09:10:53 PM | Posted IP 162.1*****

ஐயா.09.09.2016 அன்று கோர்ட் தடை விதித்துள்ளது.ஆனால் பத்திரபதிவு அலுவலகத்தில் எப்போதும் போல் பத்திரபதிவு நடைபெற்றுள்ளது.. இப்போது அது செல்லாது என்றால் யார் குற்றம்..?

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும்இயக்கம்மே 19, 2017 - 11:26:42 PM | Posted IP 27.62*****

வரவேற்தக்கது.நீண்டகாலமிக இந்தபிரச்சினைக்கு.தீர்வு

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும்இயக்கம்மே 19, 2017 - 11:26:41 PM | Posted IP 27.62*****

வரவேற்தக்கது.நீண்டகாலமிக இந்தபிரச்சினைக்கு.தீர்வு

vimalமே 18, 2017 - 01:01:37 PM | Posted IP 117.2*****

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் உள்ள இடங்களுக்கு தடை இல்லா சான்று கிடைக்குமா. அரசின் தீர்ப்பில் இது சேருமா .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD








Thoothukudi Business Directory