» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளின் தோழி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் : லாரி ஓட்டுனர் மீது வழக்குபதிவு

புதன் 17, மே 2017 2:43:04 PM (IST)

துாத்துக்குடியில் மகளின் தோழியையே பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துாத்துக்குடி 3 வது மைல் பகுதியில் வசிப்பவர் சக்திவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.இதில் மூத்தமகள் தற்போது 8ம்வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவருடன் படிக்கும் தோழி எதிர்வீ்ட்டில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் 25ல் தனது தோழியை பார்க்க அச்சிறுமி சென்ற போது அவர் வீட்டில் இல்லை. அச்சிறுமியின் தந்தை தவசிப்பெருமாள் (45) மட்டும் இருந்துள்ளார்.

தொடர்ந்து அவர் மகளின் தாேழி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதில் அவர்கள் பயந்து போய் புகாரளிக்கவில்லை.இது குறித்து குழந்தைகள் உதவி மையத்திற்கு தெரிய வந்து துாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கணவன் மனைவி மீது  வழக்கு பதிவு செய்துள்ளார்கள். பின்னர் சிறுமி மருத்துவசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Nalam Pasumaiyagam




Johnson's Engineers

New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua



Thoothukudi Business Directory