» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் தனியார் நிறுவனங்களுக்கு சீல்

வெள்ளி 12, மே 2017 7:24:39 PM (IST)துாத்துக்குடியில் இயங்கி வந்த பிரபல அபி பேன்சி பேபி நிறுவனத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

துாத்துக்குடியில் விஜிஎஸ் பெண்கள் பள்ளி அருகே அபி பேன்சிபேபி மற்றும் லேடீஸ்சாய்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி ஏதும் பெறாமலும், மாநகராட்சியின் உத்தரவுகள் பின்பற்றபடாமல்  இயங்கி வருவதாக கூறி அபி பேன்சிபேபி மற்றும் லேடீஸ்சாய்ஸ் நிறுவனத்திற்கு சென்ற உள்ளூர் திட்டகுழும அதிகாரிகள் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனே வெளியேறுமாறு கூறி அந்நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து உள்ளூர் திட்ட குழும உதவி இயக்குனர் ராமச்சந்திரன் கூறும் போது, இந்த நிறுவனம் இயங்கி வந்த இடம் துாத்துக்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமானது. மேலும் இக்கட்டடம் விதிமுறைகளை மீறியும், பார்க்கிங் வசதி இல்லாமலும் செயல்பட்டு வந்தது. இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. எனவே அபி நிறுவனத்திற்கு உள்ளூர் திட்ட குழுமமும்,துாத்துக்குடி மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ் அனுப்பபட்டது.ஆனாலும் அந்நிறுவனம் இது குறித்து எவ்வித பதிலும் தெரிவிக்காததால் இன்று துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

சீல் வைக்கும் பணியில் உள்ளூர் திட்டகுழும உதவிஇயக்குனர் ராமச்சந்திரன், மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜன், மண்டலதுணை வட்டாட்சியர் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் ஆனந்த், கிராம நிர்வாக அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து

Tuticorian manமே 18, 2017 - 09:56:48 PM | Posted IP 117.2*****

There are hidden reasons why such moves are not organised and executed by the government officials like this. Why such actions are not applied uniformly for other erring shops/institutions/organisations?

M.sundaramமே 13, 2017 - 10:23:36 AM | Posted IP 103.2*****

There are so many shops and other institutions which do not have adequate parking place. Even the canteen and policlinic for the ex service men do not have the proper parking place for two and four wheelers. What action has been taken by the corporation. is it true that the owner of the building is a TN govt officer, therefore, no action is taken.

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும்இயக்கம்மே 13, 2017 - 12:27:17 AM | Posted IP 27.62*****

இதைபோலவிதிமுறைமீறிகட்டியகட்டத்தைஅனைத்தின்மீதும்நடவடிக்கைதேவை

தமிழ்நாடுமக்கள்நலன்காக்கும்இயக்கம்மே 13, 2017 - 12:27:08 AM | Posted IP 27.62*****

இதைபோலவிதிமுறைமீறிகட்டியகட்டத்தைஅனைத்தின்மீதும்நடவடிக்கைதேவை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory