» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்நடைத்துறை பணிகளுக்கான நேர்முகத் தேர்வு : தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

புதன் 10, மே 2017 11:35:02 AM (IST)



தூத்துக்குடியில் கால்நடைத்துறை உதவியார் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்க்ள நீண்ட வரிசையில் காத்திருந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில்  கால்நடைத்துறையில் காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கு 7804பேர் விண்ணப்பித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவபெருமனை வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடக்கிறது. தூத்துக்குடி மண்டலத்தில் இன்று தொடங்கி முதல் 17–ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும்  (ஞாயிறு தவிர்த்து) நேர்முகத் தேர்வு நடக்கிறது. ஒரு நாளைக்கு 1115பேர் நேர்முகத்தேர்வு நடக்கிறது. 

தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் டாக்டர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் 9 குழுக்களாக அதிகாரிகள் நேர்முகத் தேர்வு நடத்தி வருகிறார்கள். மேலும், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட தனிக்குழுவும் நேர்முகத் தேர்வை கண்காணித்து வருகின்றனர். மொத்தம் 125பேர் நேர்முகத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேர்முகத் தேர்வுக்காக வந்தவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், உறவினர் என ஏராளமானோர் புதுக்கிராமம் கால்நடை மருத்துவமனை வளாகம் முதல் போல்டன்புரம் வரை நீண்ட வரிசையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தால் காத்து நிற்கின்றனர். 

நேர்முகத் தேர்வின்போது, விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து விண்ணப்பதாரர்கள், நேர்காணல் நடந்த வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த மாடுகளை அவிழ்த்து சிறிது தூரம் கொண்டு சென்று மீண்டும் கம்பத்தில் கட்டும் தேர்வும் நடந்தது. இதில் பெண் விண்ணப்பதாரர்கள் உள்பட அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று மாடுகளை பிடித்து கட்டி காண்பித்தனர். 





மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


CSC Computer Education


Johnson's Engineers

Panchai Dairy

Nalam Pasumaiyagam




Universal Tiles Bazar

New Shape Tailors


selvam aqua

Black Forest Cakes



Thoothukudi Business Directory