» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இறால் பண்ணை உதவியாளர் சான்றிதழ் பயிற்சி: ஜன.17ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய அழைப்பு

வியாழன் 12, ஜனவரி 2017 12:35:09 PM (IST)

தருவைக்குளம் கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு துறையில் "இறால் பண்ணை உதவியாளர் சான்றிதழ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக விளங்கும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை தருவைக்குளத்தில் வருகின்ற 18.01.2017 முதல் 22.02.2017 வரை "இறால் பண்ணை உதவியாளர்” குறித்த அடிப்படை தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சி ஒரு மாத காலம் வழங்கப்பட உள்ளது. 

இப்பயிற்சியில் இறால் வளர்ப்புக்குறித்த தொழில்நுட்ப வகுப்புப்பயிற்சி மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் முறையே ஏழு நாட்கள் மற்றும் இருபத்தியொரு நாட்கள் அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.1000 செலுத்தி பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 17.01.2016 மாலை 5.00 மணிக்குள் தொலை பேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர்
கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை
நீர்வாழ் உயிரின வளர்ப்பு பள்ளி
மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தருவைக்குளம் - 628 105, தூத்துக்குடி 
தொலை பேசி எண்: 0461 – 2277424 / 2340554
அலை பேசி எண் - 09442288850
மின் அஞ்சல் - sathithan1966@yahoo.com


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Black Forest Cakes





CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory