» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் பொங்கல் விழா கபடிப் போட்டிகள் : இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நடக்கிறது

வியாழன் 12, ஜனவரி 2017 11:09:46 AM (IST)

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் விளையாட்டுத் துறை சார்பில் தமிழர் திருநாள் மின்னொளி  கபடிப்போட்டிகள் வருகிற 16, 17 ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் விளையாட்டுத்துறை சார்பில் தமிழர் திருநாள் மின்னொளி  கபடிப் போட்டிகள் ஜன. 16, 17 ஆகிய இரண்டு நாள்கள் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாவட்ட ஆண்கள், மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் உலகத் தரத்தில் மேட் முறையில் நடத்தப்படுகிறது. 

முதல்நாள் போட்டியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி துவக்கி வைக்கிறார். இதில் அளத்தங்கரை, உண்ணாமலை, விருதுநகர், மெஞ்ஞானபுரம், குளத்தூர், கண்ணங்குளம், கூடன்குளம், ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், தூத்துக்குடி, திசையன்விளை, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி, தென்திருப்பேரை, பண்ணவிளை உள்பட பல்வேறு மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் அணியினர் 9443562312 என்ற செல்போண் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற  கபடிவீரர் மணத்தி பி. கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் மணத்தி எட்வின், ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Johnson's Engineers

selvam aqua



New Shape Tailors

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory