» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நோய்களை வாரி வழங்கும் மாநகராட்சி : பொதுமக்கள் பாராட்டு

புதன் 11, ஜனவரி 2017 7:24:02 PM (IST)
துாத்துக்குடியில் சாலைகள் சாியாக போடாததால் புழுதிப்புயல் கிளம்பி துாசி கண்களில் விழுந்து வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

துாத்துக்குடிக்கும் அடிப்படை வசதிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் போல. நம் நகரில் விஇ ரோடு பழைய அஞ்சல் நிலையத்தில் ஆரம்பித்து மார்க்கெட் சிக்னலில் வந்து முடிகிறது. சுகம் ஹோட்டலில் இருந்து ஆரம்பித்து காய்கறி மார்ககெட் வரையிலான சாலை சாியாக போடவில்லை. கடந்த சில வருடங்களாக சாலை போடாமல் இருந்து சில மாதங்களுக்கு முன் சரள் பரப்பி விட்டு பின்பு கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர்.

இதன் விளைவாக குறிப்பிட்ட அப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது மிகப்பெரிய அளவில் துாசி பறக்கிறது. நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் தொடர்ந்து செல்லும் போது சாலையே கண்ணுக்கு தெரியாத அளவில் துாசி பறந்து வாகனஓட்டிகளின் கண்கள் மற்றும் நுரையீரலை பதம் பார்க்கிறது. மேலும் அப்பகுதியில் சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளி, பெண்கள் பள்ளி, கேவிஎஸ் மேல்நிலை பள்ளி என சுமார் 5 பள்ளிகள் உள்ளன. உயரே எழும்பும் துாசி வகுப்பறைகளுக்கு உள்ளே சென்று மாணவ மாணவிகளின் கண்களில் விழுகிறது. மேலும் அவர்களுக்கு மூச்சுத்திணறலையும் ஏற்படுத்துகிறது.

இப்பகுதியில் படிக்கும் பள்ளி மாணவிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இருமியபடி இருந்துள்ளனர். இதனால் பதறிய பெற்றோர் ஆஸ்பத்திரியில் சென்று காட்டிய போது ஒன்றுமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அவருக்கு இருமல் நின்றபாடில்லை. அவரது இருமலுக்கு இந்த துாசி மண்டலமே காரணம் என தற்போது தான் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. விஇ ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். மாணவ மாணவியர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், அப்பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள் பிற வாகன ஓட்டிகள் என அனைவருமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வளவு பிரச்சனைகள் இருக்க இது குறித்து துாத்துக்குடி மாநகராட்சிக்கு தொியுமா தெரியாதா என தெரியவில்லை. கடந்த 2015 ம் ஆண்டு பெய்த பெரு மழையில் சேதமான சாலைகளையே இன்னும் முழுமையாக போடவில்லை. நகரின் பிரதான சாலைக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதி சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

இது குறித்து துாத்துக்குடி கேவிகே நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் என்பவர் கூறுகையில், தினசரி இந்த துாசி மண்டலத்தில் வந்து செல்வது மிகப்பெரிய அவஸ்தையாக இருக்கிறது. சில நேரங்களில் துாசியால் சாலையே தெரியாமல் விபத்துகள் நடக்கிறது.துாத்துக்குடியில் மாநகராட்சி என்ற ஒன்று இருக்கிறதா ? அதிகாரிகள் வேலை செய்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

மாநகராட்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குகிறதோ இல்லையோ ஆனால் ஆஸ்துமா போன்ற நோய்களை வாரிவழங்குகிறது. விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம் என ஆவேசமாக தெரிவித்தார். இப்பிரச்சனைக்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.


மக்கள் கருத்து

மக்கள்Jan 13, 2017 - 08:10:14 PM | Posted IP 122.1*****

அட மாநகராட்சி நிர்வாகம் உறங்கி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலை இன்னும் மோசமாகும். மக்கள் நாம் தான் இதை சரி செய்ய வேண்டும் .

ஒருவன்Jan 13, 2017 - 08:33:53 AM | Posted IP 117.2*****

ஆமாம் .. சில டிராபிக் போலீசாரும் வேஸ்ட் .. ஹெல்மெட் க்கு காசு மட்டும் தான் பார்ப்பாங்க ...அதை சரிபன்ன சொல்ல மாட்டாங்க

பிரியங்காJan 12, 2017 - 05:33:10 PM | Posted IP 115.2*****

தூத்துக்குடி முன்னேறாமல் இருப்பதற்கு காரணமே இங்கு செயல் படும் மோசமான மாநகராட்சி நிர்வாகிகளால் தான்... திருநெல்வேலி பாளையம்கோட்டை ஊர்களில் உள்ள சாலைகள் எல்லாம் தரமானவை.. இங்கு ஊழலுக்கு பெயர்போன நிர்வாகம் இருக்கும்போது தூத்துக்குடி முன்னேறுவது கேள்விக்குரியதே... இங்கு இருக்கும் கலெக்டரும் தத்தி தான்.. மக்கள் தான் பரிதாப நிலையில் உள்ளனர்...

ManithanJan 12, 2017 - 01:04:18 PM | Posted IP 115.2*****

இந்த செயல்படாத அரசியல் வாதிகளை அடிச்சது துரத்துனாதான் தூத்துக்குடிக்கு விடிவு காலம் ...வோட்டு போடாதீங்க ...எல்லாரும் சேந்து சிட்ரிக் பேணுவோம்

marshelJan 11, 2017 - 09:12:23 PM | Posted IP 101.5*****

எல்லா புகழும் ஆனையாளருக்கே !

பழனிJan 11, 2017 - 08:40:26 PM | Posted IP 117.2*****

இன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்த 25 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை பற்றிய செய்தி எப்போது போடுவீர்கள் ?

VelmuruganJan 11, 2017 - 08:13:14 PM | Posted IP 122.1*****

Good report. Thanks tuty.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory