» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் பெண்கள் திடீர் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு : போலீசார் குவிப்பு

புதன் 11, ஜனவரி 2017 7:10:57 PM (IST)




தங்கள் பகுதிக்கு 21 நாட்களாக தண்ணீர் வழங்காததை கண்டித்து ஜார்ஜ் ரோட்டில் 33 மற்றும் 35 வது வார்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

துாத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தற்போது ஏறக்குறைய மாதத்திற்கு ஒருமுறை தான் கு்டிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புற நகர பகுதிகளின் நிலையோ இதை விட மோசமாக உள்ளது. இந்நிலையில் துாத்துக்குடி பாத்திமா நகர் அருகே உள்ள பிவிஆர் புரம்,இந்திரா நகர்,ஆசிரியர் காலனி பகுதிகளில் கடந்த 21 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.இது குறித்து மாநகராட்சியில் கேட்ட போது சரியான பதில் கூறவில்லையாம்.

இதனால் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் 100 பெண்கள் உட்பட மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் திடீரென காலிக்குடங்களுடன் ஜார்ஜ் ரோடு பகுதிக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் மறியலில் ஈடுபட்டவர்களி்டம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அதில் இப்பிரச்சனை தொடர்பாக நாளை காலை துாத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் பேசி உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


மக்கள் கருத்து

உண்மைJan 12, 2017 - 05:03:25 PM | Posted IP 115.2*****

வந்த தண்ணியெல்லாம் கடலுக்கு விட்டுட்டு இப்போ தண்ணிய கொடு தண்ணிய கொடுன்னு சொன்ன எங்க இருந்து கொடுக்குறது... இங்க நீர் மேலாண்மை கொஞ்சம் கூட கடைபிடிக்கப்படுவது இல்லை.. அப்புறம் இந்த மாதிரி மழை இல்ல காலங்களில் மக்கள் கஷ்டப்பட தான் செய்வார்கள்...

சிவகுமார்Jan 12, 2017 - 11:32:17 AM | Posted IP 182.7*****

தூத்துக்குடி மா நகர்ச்சி யா பதில் சொல்லு ????

சிவகுமார்Jan 12, 2017 - 11:31:15 AM | Posted IP 182.7*****

தண்ணி எப்போ வரும் ????

sunderJan 12, 2017 - 12:21:21 AM | Posted IP 27.62*****

வாட்டர் சப்ளை????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here

CSC Computer Education

Universal Tiles Bazar

New Shape Tailors

selvam aqua



Johnson's Engineers


Nalam Pasumaiyagam

Black Forest Cakes





Thoothukudi Business Directory