» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ வழங்கினார்

புதன் 11, ஜனவரி 2017 12:39:55 PM (IST)கோவில்பட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  தமிழக அரசின்  பொங்கல் பரிசு தொகுப்பை, அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்று (11.01.2017) நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ 1397 பயனாளிகளுக்கு வழங்கினார்

இவ்விழாவில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கி பேசியதாவது: உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு செய்யும் தொண்டு தெய்வத்திற்கு செய்யும் தொண்டு என்பார்கள். அம்மா அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்வாதாரத்தை உணர்த்தும் திட்டமாக இருக்கும். அம்மா தான் செயல்படுத்திய ஒவ்வொரு திட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இயற்கை காரணமாக தற்பொழுது தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டிருந்தாலும் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மேலும், வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே முதல்வர் அம்மா தான். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி வர்தா புயலின் பாதிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்ற நேரங்களில் அரசு விரைந்து செயல்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவில் திரும்பச் செய்தது, அதேபோல் வறட்சியின் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கின்ற வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், பேசும் போது: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாமகளில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வழங்கப்படுகின்றன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 958 நியாயவிலைக்கடைகளில் 424878 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.1,91,19,510/- மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றார். 

இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுடலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆரோக்ய சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், கோவில்பட்டி வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

R.BALACHANDRABOOPATHYJan 11, 2017 - 05:54:40 PM | Posted IP 117.2*****

Sir Kindly arrange once again issue the pongal gift send us at KOOTAMPULI, people for more people need for PONGAL Complement.

கணேஷ்Jan 11, 2017 - 05:00:22 PM | Posted IP 122.1*****

செலவுக்கு 100 2000 ரூவா கொடுக்கலயா , அல்லது ஒரு விஸ்கி , பிராந்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Universal Tiles Bazar

Nalam Pasumaiyagam

Johnson's Engineers


selvam aqua


New Shape TailorsCSC Computer EducationThoothukudi Business Directory