» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மேலரத வீதி : பள்ளி மாணவிகள் கடும் அவதி

செவ்வாய் 10, ஜனவரி 2017 6:40:48 PM (IST)




துாத்துக்குடி விஜிஎஸ் பெண்கள் பள்ளி முன்பு பள்ளி முடிந்தவுடன் தினசரி கடும் போக்குவரத்து நெரிசலால் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

துாத்துக்குடி மேலரத வீதியில் விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு இருபுறமும் வடக்கு ரத வீதிக்கு செல்லும் சாலையும் அதே போல் டபிள்யூ ஜி சி சாலையும் அமைந்துள்ளது. மேலும் இப்பள்ளி அருகே சிஎம் மேல்நிலைப்பள்ளியும் ஸ்டார் மெட்ரிக் பள்ளியும் அமைந்துள்ளது.இதனால் காலை மற்றும் மாலை பள்ளி தொடங்கும் நேரம், அலுவலகம் வந்துசெல்வோர் என எந்நேரமும் பரபரப்பாக இச்சாலை இருக்கும்.

குறிப்பாக மாலையில் பள்ளி முடிந்தவுடன் ஏராளமான மாணவிகள் மாெத்தமாக வெளியில் வருவார்கள். அதே நேரம் அலுவலகம் வந்து செல்வோர் மற்றும் பிற வேலையாக செல்பவர்கள் என மொத்தமாக அங்கு குவிவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவியர்களை அழைத்து செல்ல பெற்றோர்களும், ஆட்டோ, கார்களும் நிற்பதால் இன்னும் நெரிசல் கூடுகிறது.

இன்று மாலை சுமார் 6 மணியளவில் சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவ மாணவியர் வெளியே வந்த போது அதே போல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாயினர். சத்திரம் நிறுத்தத்தில் திரும்பி வடக்கு ரத வீதி சாலையை அடையவே சுமார் அரைமணி நேரம் ஆனதென்றால் அதன் வீரியத்தை புரிந்து கொள்ளலாம். துாத்துக்குடியில் குறைந்த அளவே போக்குவரத்து போலீசார் உள்ளதாக கூறப்படுகிறது. 

இரவு நேரங்களில் அனைத்து கடைகளையும் விரைவில் அடைக்க கூறியும், கடைக்காரர்கள் மீது வழக்கு போடும் போலீசார் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு இருந்த கடைக்காரர்கள் கூறினர். இதே கருத்தை பெற்றோர்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா ?


மக்கள் கருத்து

மக்கள்Jan 10, 2017 - 08:54:15 PM | Posted IP 117.2*****

மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, சிவன் கோவில் தெரு 2 ஆம் கேட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவும்

nathaJan 10, 2017 - 08:00:44 PM | Posted IP 117.2*****

A S P உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Black Forest Cakes






selvam aqua

Nalam Pasumaiyagam




CSC Computer Education


Johnson's Engineers



Thoothukudi Business Directory