» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவு நாள்: உறவினர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி

செவ்வாய் 10, ஜனவரி 2017 5:35:13 PM (IST)



தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் 5வது  ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி அலங்காரதட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மலர்வளையம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன். கடந்த 2012ம் ஆண்டு ஜன.10ம் தேதி திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி அருகே உள்ள அலங்கார தட்டில் அடக்கம் செய்யப்பட்டு அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. அதன் அருகே அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனின் நினைவிடமும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பசுபதி பாண்டியனின் நினைவிடத்தில் அவரது ஆதரவாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு 5வது நினைவு நாளையொட்டி பசுபதி பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெசிந்தாபாண்டியன் நினைவிடங்களில் அவர்களது மகன் சந்தோஷ் பாண்டியன், பசுபதி பாண்டியனின் சகோதரி பார்வதி மற்றும் உறவினர்கள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நினைவு நாளையொட்டி நேற்று மாலை 6 மணி முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வௌியூரிலிருந்து வாகனங்களில் வந்து அஞ்சலி செலுத்ததடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் ஏஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெளியூர்களிலிருந்து தூத்துக்குடிக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.


மக்கள் கருத்து

M.sundaramJan 11, 2017 - 04:30:27 AM | Posted IP 59.89*****

More police personnel were deployed for this event. is it required? People should understand and conduct the event in a dignified manner without any incovenience to the general public and to the police. That is pure democracy.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Black Forest Cakes


CSC Computer Education


selvam aqua


New Shape Tailors



Nalam Pasumaiyagam

Panchai Dairy



Thoothukudi Business Directory