» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னறிவிப்பின்றி வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு : முதல்வரிடம் புகார்

செவ்வாய் 10, ஜனவரி 2017 8:20:51 AM (IST)

தூத்துக்குடியில் முன்னறிவிப்பின்றி வாகனங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுளள்தால் வாகன உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:  சமீபத்தில் மத்திய அரசு அரசாணை எண் 894, நாள் : 29.12.2016-ன்படி இந்தியா  முழுவதும் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வாகன உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மத்திய அரசின் ஆணையானது தமிழகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு 06.01.2017 அன்று தான் கிடைத்துள்ளது.  ஆனால் எவ்வித முன்னறிவிப்புமின்றி 29.12.2016 முதல் முன்தேதியிட்டு கட்டண உயர்வை வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்திரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரடியாக தலையிட்டு தமிழகத்தில் 07.01.2016 முதல் மட்டுமே உயர்த்தப்பட்ட வாகனங்களுக்கான கட்டணத்தை வசூலிக்க ஆணையிடுமாறு வேண்டுகிறோம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads








Black Forest Cakes


Nalam Pasumaiyagam


CSC Computer Education

selvam aqua



Thoothukudi Business Directory