» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் அடித்துக் கொலை: தூத்துக்குடியில் பயங்கரம் - முன்விரோதத்தில் எதிர்வீட்டு நபர் வெறிச்செயல்

திங்கள் 9, ஜனவரி 2017 10:25:29 AM (IST)

தூத்துக்குடியில் இன்று அதிகாலை வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண், கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் எட்டையபுரம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி. இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் கணேசன் மகன் அம்பிகாபதி (45). இருவரது குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு செண்பவவல்லி தனது குழந்தைகளை திட்டினாராம். அப்போது தன்னைத்தான் ஜாடையாக அவர் திட்டுகிறார் என எண்ணி, அம்பிகாவதி செண்பகவல்லியிடம் தகராறு செய்துள்ளார். 

அப்போது இருவரது குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அவர்களை சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை செண்பகவல்லி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, அம்பிகாபதி அவரது லையில் உருட்டுக் கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செண்பகவல்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதையடுத்து அம்பிகாபதி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 

இதுகுறித்து, தகவல் அறிந்து ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், வடபாகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். செண்பகவல்லியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தப்பியோடிய அம்பிகாவதி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

M.sundaramJan 10, 2017 - 06:17:47 AM | Posted IP 117.2*****

It shows woman is equal to man in murdering also.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

Nalam Pasumaiyagam

Black Forest Cakes








Johnson's Engineers



CSC Computer Education



Thoothukudi Business Directory