» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு : ஆட்சியர் அறிவிப்பு

சனி 7, ஜனவரி 2017 9:14:51 PM (IST)

துாத்துக்குடியில் வரும் 9ம் தேதி முதல் 11 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது, வரும் 10 ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியனின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் வரும் 9 ம் தேதி மாலை 6மணி முதல் 11ம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலிருந்தும் விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் ஐந்திற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டுவருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் மேற்படிவிழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்தடை உத்திரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.மேற்படி நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து

நயினார்Jan 8, 2017 - 05:19:42 PM | Posted IP 169.1*****

சட்டத்தை பாதுக்காக்கவா? சங்கடத்தை பாதுக்காக்கவா? எதனால் இந்த நிலை புரியாமல் தவிக்கிறோம்! ஆட்சியர் தனது ஆட்சித்திறனை வெளிபடுத்துகிறாரா இல்லை அரசு வெளிபடுத்துகிறதா எதுவென்றாலும் மனது வலிக்கவே செய்கிறது மக்கள் கூடும் ஐனநாயகத்துக்கு தடையா? நாம் வாழ்வது சுதந்திர இந்தியாவா? ஆங்கிலேயர் இந்த தடையை அமல் செய்து ஆள நினைத்து நம்மை சங்கடத்தில் ஆழ்த்தினர் எல்லாவற்றையும் உடைத்து நாட்டை சுதந்திரமாக்கினோமே இன்றும் அதே தடையா? மக்களின் தலைவர்களை ஒன்றுக்கூட்டி எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கலந்து ஆலோசித்து சில தடைகளை விதித்து இருக்கலாம்! ௧௪௪ தடை தேவையில்லாது அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சியாக இருந்தாலும் இம்முயற்சி தோல்வியை! ஒரு இனத்தின் சீற்றத்தை அரசு சம்பாதிக்கிறது!! மக்களே சிந்தியுங்கள் அரசுக்கும் அதிகாரிக்கும் சங்கடங்களை கொடுக்காமல் இதுப்போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுத்து அதிகாரிகள் இதுபோன்ற தடைவிதிக்கும் சூழலை தராமல் நடத்த முயற்சிப்போம்! இத்தடையின் காரணத்தை உணரமுடியவில்லை இருந்தாலும் இனிமேலாவது இதுபோல தடைகளை விதித்து நமது தரத்தை குறைக்காமல் அரசு கவனம் செலுத்தட்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors

Joseph Marketing







Thoothukudi Business Directory