» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குத்துச்சண்டை போட்டியில் வீராங்கணை திடீர் மரணம் : தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 6, ஜனவரி 2017 3:34:55 PM (IST)



தூத்துக்குடியில் குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

தூத்துக்குடி கோரம்பள்ளம், மாதவன் நகரைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகள் மாரீஸ்வரி (14). இவர் தூத்துக்குடி சோரீஸ்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். குத்துச்சண்டை வீராங்கணையான இவர் இன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் அரசு சார்பில் நடைபெறும் மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டார். 45கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர், சுமார் 25 வினாடிகள் விளையாடியபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால், சக மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து மாரீஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இப்போட்டிகள் அரசு சார்பில் நடைபெற்று வருவதால், சம்பவம் குறித்து தூத்துக்குடி சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். மல்யுத்த போட்டியியில் பங்கேற்ற மாணவி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இன்று கேலோ விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. இதில், டேக்வாண்டோ, பளுதூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடக்கிறது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.  மாணவி மாரீஸ்வரி மயங்கி விழுந்ததும் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என உறவினர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். அவரது உறவினர்களே மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்ததும், அவர்கள் கதறி அழுந்தனர். இது சக மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Black Forest Cakes



Nalam Pasumaiyagam

selvam aqua

Panchai Dairy



CSC Computer Education



Thoothukudi Business Directory