» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரபல ரவுடிக்கு என்கவுண்டர் வதந்தி : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

வியாழன் 5, ஜனவரி 2017 6:18:38 PM (IST)




பிரபல ரவுடிக்கு என்கவுண்டர் என வதந்தி கிளம்பியதால் முறப்பநாடு காவல் நிலையத்தினை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் பேச்சிமுத்து என்ற பாயாச பேச்சி (40). கடந்த 25.05.2015 அன்று கீழபுத்தனேரி சுடலை குமார் என்பரை கொலை செய்ததில் இவர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பேச்சிமுத்து மட்டும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவானார்.

அதோடு மட்டுமல்லாமல் பேச்சி முத்து மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று மாலை திருப்பூரில் ஒரு வழக்கு சம்பந்தமாக பேச்சிமுத்தை போலீசார் கைது செய்தனர். அதோடு இவர் மீது பல வழக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வழக்கு சம்பந்தமாக அவரை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். 

இதற்கிடையில் பேச்சிமுத்து மீது பல்வேறு கொலை வழக்கு உள்ள காரணத்தினால் இவரை எண்கவுன்டரில் போலீசார் சுட்டு கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்ற வதந்தி காட்டு தீ போல மணக்கரை உள்பட பல கிராமங்களில் பரவியது. இதனால் மணக்கரை மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள அவரது உறவினர்கள் திரண்டனர். முறப்பநாடு காவல் நிலையத்தினை அவர்கள் முற்றுகை இட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் நோதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை மாநில துணை தலைவர் இசக்கி ராஜ், பார்வர்டு பிளாக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், மணக்கரை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சி முத்து மனைவி சுப்பு லெட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு பேச்சி பேபி, பானு என்ற இரண்டு மகள்களும் துரைபாண்டி என்ற மகனும் உள்ளனர்.

பேச்சி பேபி கூறும் போது,எங்களுக்கு தாய் இல்லை.வயதான பாட்டி பராமரிப்பில் தான் வாழ்ந்து வருகிறோம். எனது தந்தை எங்கிருந்தாலும் எங்களுடன் போனில் தொடர்பு கொள்வார். கடந்த இரண்டு நாளாக பேசவில்லை. இப்போது போலீசார் அவரை பிடித்து சுட்டு கொல்ல முடிவு செய்துள்ளார்கள் என கேள்விபட்டேன். என் தந்தையை என் கண் முன்னால் காட்ட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறினார்.


மக்கள் கருத்து

ராம்Jan 5, 2017 - 06:34:28 PM | Posted IP 59.96*****

அவர் நெல்லை கோர்ட் ல் நேற்று ரிமாண்ட் செய்யப்பட்டார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads





Panchai Dairy

CSC Computer Education


Black Forest Cakes

New Shape Tailors

Johnson's Engineers

Nalam Pasumaiyagam

selvam aqua





Thoothukudi Business Directory