» செய்திகள் » வெளிநாடு

Share

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

வியாழன் 29, ஜூலை 2010 1:05:35 PM (IST)

இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன.
 
அவர்களை கினாகரோ (45) என்ற போட்டோ கிராபர் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார். இதற்காக வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார்.
 
துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads