» செய்திகள் » வெளிநாடு

Share

இ‌ங்‌கிலா‌ந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பெங்களூரு வருகை

செவ்வாய் 27, ஜூலை 2010 11:46:31 AM (IST)

இ‌ங்‌கிலா‌ந்து பிரதமர் டேவிட் கேமரூன் மூ‌‌ன்று நாள் அரசு முறைப் பயணமாக பெங்களூருக்கு இ‌ன்று வருகிறார்.

இதையொட்டி பெங்களூரு‌வில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேவிட் கேரூன் இ‌ன்று இரவு 10.40-க்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹோட்டல் லீலா பேலஸ் சென்று தங்குகிறார். நாளை காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜை சந்தித்துப் பேசுகிறார்.

அத‌ன் பின்னர் டெல்லி செ‌ல்லு‌ம் அவ‌ர், குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், அயலுறவுதுறை அமை‌ச்ச‌ர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இங்கிலாந்து பிரதமருடன் அந்நாட்டு அமை‌ச்ச‌ர்கள், தொழில் அதிபர்கள் கொண்ட குழுவினரும் இந்தியா வருகிறார்கள். இவர்கள் தனியாக சென்னை, மும்பை, பெங்களூரு செல்கிறார்கள்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads