» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்களில் உலகின் மிக இளம்வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், 306 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்குமுன், 1717-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவியேற்று ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் மிக இளம்வயது பேராசிரியர் என்ற சாதனையை படைத்திருந்தார். 2008-ம் ஆண்டில் அலியா சபூர் என்ற பெண் 18 வயதிலேயே இளம் பேராசிரியர் என்ற சாதனையை படைத்திருந்தார்.அவரைவிட 16 நாட்கள் இளையவர் நாதன் தாமஸ். இதன்மூலம் இருபாலரிலும் இவரே இளம் வயது பேராசிரியர் நாதன் தாமஸ், மியாமி டேட் கல்லுாரியில் இன்ஜினீயரிங் பாடங்களை கற்றுக்கொடுக்கும் பணியில் இணைந்துள்ளார். தனது 10 வயதிலேயே அக்கல்லூரியில் பள்ளிப்படிப்புடன் சேர்த்து கல்லூரிப் படிப்பையும் தொடங்கிவிட்டார் நாதன் தாமஸ். 14-வது வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை தொடங்கினார்.
மின் பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை பட்டங்களையும் 18 வயதுக்குள் முடித்தார். தற்போது தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார். மியாமி பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் டாக்டரேட் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)








