» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய டிரோன் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் சோதனைச் சாவடி மீது நள்ளிரவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
சோதனைச் சாவடியைக் இலக்கு வைப்பதற்கு முன்பாக, 'குவாட்காப்டர்' (Quadcopters) எனப்படும் அதிநவீன டிரோன்கள் மூலம் வெடிபொருட்களை வீசியும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 28 பேர் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எல்லைப் பகுதியில் அதிநவீன டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த நள்ளிரவுத் தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)








