» செய்திகள் » உலகம்

பெண்களுக்கு பிகினி உடையில் பாதுகாப்பு பணிக்கு பயிற்சி: சீனாவில் கடும் எதிர்ப்பு

வெள்ளி 27, ஜனவரி 2012 5:24:14 PM (IST)


சீனாவில் தனியார் பாதுகாப்பு பணிக்கு (பாடிகார்ட்) பிகினி உடையில் இளம்பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில், டியான்ஜியாவோ ஸ்பெஷல் சேப்டி கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், தனியார் நிறுவனங்கள், வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாவலர்களாக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்து அனுப்புகிறது. இதற்காக 20 இளம்பெண்களுக்கு இப்போது பயிற்சி அளித்து வருகிறது. 

அவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி பட்டதாரி மாணவிகள். மொத்தம் 10 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக சமீபத்தில் பிரபல சன்யா கடற்கரையில், பிகினி உடை அணிந்து வந்த இளம்பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சரியாக பயிற்சி செய்யாத பெண்களை ஆண் பயிற்சியாளர்கள காலால் உதைப்பது, கனமாக மரத்தை தூக்கி செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு சீனாவில் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாடிகார்டு பயிற்சி என்றால், எதற்காக பிகினி உடையில் பயிற்சி அளிக்க வேண்டும். இது வியாபாரத்தனமாக உள்ளது. மேலும், பாதுகாவலர்களாக நியமிக்கப்படும் பெண்கள், விபசாரத்துக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.

பணக்காரர்களுக்கும், பிரபலங்களுக்கும் பணிபுரியும் போது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் சீன கலாசாரம் கேள்விக் குறியாகி விடும் என்று டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் பயிற்சியில் தேர்வான இளம்பெண்கள் சிலரை, அடுத்தகட்ட பயிற்சிக்காக இஸ்ரேல் பாதுகாவலர் பயிற்சி அகடமிக்கு அனுப்பி வைக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory