» செய்திகள் » உலகம்

பாகிஸ்தானில் காலாவதியான மாத்திரையால் விபரீதம்: இருதய நோயாளிகள் 100 பேர் பரிதாப சாவு

வெள்ளி 27, ஜனவரி 2012 5:19:09 PM (IST)


பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட இருதய நோயாளிகள் 100க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பஞ்சாப் மாகாணம் லாகூரில் பஞ்சாப் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி உள்ளது. இங்கு இருதய நோயாளிகளுக்கு இலவச மாத்திரைகள் வழங்கப்பட்டன. கடந்த மாதம் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டனர். எலும்பு மஜ்ஜையில் தொற்று ஏற்பட்டது. 

உடல் முழுவதும் தோல் கறுத்துவிட்டது. பலருக்கும் சிறுநீரில் ரத்த போக்கு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 100க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், 72 பேர் மட்டுமே இறந்ததாக மாகாண அரசு கூறுகிறது.

இருதய நோயாளிகளுக்கு 3 விதமான மாத்திரைகளை பஞ்சாப் இருதயவியல் நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. அவற்றில் சோலுபிரின் என்ற மாத்திரை காலாவதியானது என்றும் போலி மாத்திரை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை பஞ்சாப் மாகாணம் முழுவதும் 46 ஆயிரம் பேர் இந்த மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு கோளாறில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இருதய கோளாறுக்கு வழங்கப்பட்ட மாத்திரை, எப்படி எலும்பு மஜ்ஜையை பாதித்தது என்று தெரியவில்லை என்று டாக்டர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் 22 நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய மாத்திரைகளின் மாதிரிகள், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் ஷெரீப். காலாவதியான மாத்திரையால் பஞ்சாப் மாகாணமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அரசை கண்டித்து ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து இலவச மாத்திரை வழங்கிய நிறுவனம் மூடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory