» செய்திகள் » உலகம்
பழங்குடியினரின் திடீர் முற்றுகையில் சிக்கிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட் உயிர் தப்பினார்
வெள்ளி 27, ஜனவரி 2012 11:33:35 AM (IST)
ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பழங்குடியினரின் முற்றுகையில் சிக்கிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட் உயிர் தப்பினார். அவர் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட். அங்கு நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது. தலைநகர் கேன்பராவின் ஒரு ஓட்டலில் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அதில் பிரதமர் கிலார்ட், எதிர்க் கட்சி தலைவர் டோனி அபாட் இருவரும் பங்கேற்றனர். அவர்கள் இருந்த அறையை திடீரென 200க்கு மேற்பட்ட பழங்குடியின போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.அவர்கள் போராட்டம் பற்றி முன்னறிவிப்பு இல்லாததால் ஓட்டலில் குறைந்த அளவு போலீசாரே பாதுகாப்பில் இருந்தனர். கிலார்ட், அபாட் ஆகியோரை எதிர்த்து பழங்குடியினர் வெட்கம், இனவெறியர்கள் என கோஷம் எழுப்பிய பிறகே விஷயம் தெரிந்தது. நடப்பதை அறிய வெளியே வந்த பிரதமர் கிலார்ட், அபாட்டை நோக்கி போராட்டக்காரர்கள் சிலர் பாய்ந்தனர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரதமர் தாக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், வெளியே சத்தம் கேட்டதும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வீரர்கள் குவிக்கப்பட்டதாகவும், கிலார்ட், அபாட் இருவரும் பாதுகாவலர்களால் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டு காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர். கூட்டத்தில் இருந்து மீட்கப்படும்போது ஒரு காலணியை பிரதமர் கிலார்ட் தவற விட்டார். காரில் ஏறும் வரை பலர் அவரை துரத்தி சென்று கோஷமிட்டனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் நில உரிமைக்கு 1972ல் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எனினும் பல்வேறு கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடி வருகின்றனர். இதனால், அரசு - பழங்குடியினர் இடையே பிரச்னை நீடிக்கிறது. இந்நிலையில், மற்ற ஆஸ்திரேலியர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பழங்குடி மக்களுக்கு கிடைத்தாகி விட்டது.
எனவே, அவர்களது பழைய சின்னங்கள், கட்டிடங்களை அகற்றி விடலாம் என சில தினங்கள் முன் எதிர்க் கட்சி தலைவர் அபாட் பேசினார். அதுவே பழங்குடி மக்களின் திடீர் முற்றுகைக்கு காரணம். 200க்கு மேற்பட்ட மக்களின் முற்றுகையில் சிக்கிய பிரதமரை பாதுகாவலர்கள் மீட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குர் ஆன் எரித்ததாக புகார்: ஆப்கானில் அமெரிக்க ராணுவ தளம் முன்பு பொதுமக்கள் போராட்டம்!!
புதன் 22, பிப்ரவரி 2012 12:27:45 PM (IST)

நீண்டநாள் உயிர் வாழ கைகொடுக்கும் உண்ணாவிரதம்: புதிய ஆய்வு தகவல்!!
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 4:26:17 PM (IST)

பலுசிஸ்தான் தனிநாடு அமைக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் : பாகிஸ்தான் அதிர்ச்சி!!
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 3:31:30 PM (IST)

இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற கப்பல் பாதுகாவலர்கள் கைது: இத்தாலி கண்டனம்!!
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 11:07:18 AM (IST)

பனி படலத்தை சேர்க்க கூடாது: எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைத்து சொல்கிறது சீனா!!
திங்கள் 20, பிப்ரவரி 2012 5:56:55 PM (IST)

பெண்ணுக்கு 7.4 கிலோ எடையில் குழந்தை பிறந்தது: சீனாவில் சாதணை - டாக்டர்கள் வியப்பு!
திங்கள் 20, பிப்ரவரி 2012 3:29:11 PM (IST)


