» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை: இந்திய ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சி!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:36:25 AM (IST)
அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசாக்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்கக் கனவில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களில் உயர்தகுதி கொண்ட வெளிநாட்டினரை பணியமர்த்த வழங்கப்படும் இந்த எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்தியர்களே பெற்று வருகின்றனர். குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
அரிசோனா மாநில எம்.பி. யெலி கிரேன் தாக்கல் செய்துள்ள ‘எச்-1பி விசா முறைகேட்டை முடிவுக்குக் கொண்டு வரும் சட்டம்-2026’ என்ற மசோதாவில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான பரிந்துரைகள்:
புதிய எச்-1பி விசாக்கள் வழங்குவதை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்தி வைத்தல்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 65 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகக் குறைத்தல்.
விசா பெறுவோருக்கான குறைந்தபட்ச ஆண்டுச் சம்பளத்தை 2 லட்சம் டாலராக (சுமார் ரூ.1.88 கோடி) நிர்ணயித்தல்.
விசா பெற்று அமெரிக்கா வருபவர்கள் தங்களது குடும்பத்தினரை (H-4 விசா மூலம்) அழைத்து வரக் கூடாது.
லாட்டரி முறையை ரத்து செய்துவிட்டு, அதிக சம்பளம் பெறும் தகுதியானவர்களை மட்டும் தேர்வு செய்தல்.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த எம்.பி.க்கள், "அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம். பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக மலிவான விலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் ஆவதை நாங்கள் விரும்பவில்லை" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களுக்குப் பாதிப்பு: ஏற்கனவே கடந்த ஆண்டு விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த 3 ஆண்டுத் தடை மசோதா இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கும், அங்குப் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்தியர்களின் அமெரிக்கக் கனவு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்; ஈரானிடம் கடற்படையே இல்லை - டிரம்ப் ஆவேசம்!
புதன் 13, மே 2026 11:43:59 AM (IST)

தமிழகம் - மலேசியா உறவு பலப்படும்: விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்து
செவ்வாய் 12, மே 2026 11:57:47 AM (IST)

ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)

பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)










