» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:00:28 PM (IST)
ஈரான் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தாெடர்பாக அவர் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் நிலவும் இழுபறி குறித்துப் பேசிய டிரம்ப், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தாம் அவசரப்படப்போவதில்லை என்று குறிப்பிட்டார். தற்காலிகமான தீர்வுகளை விட, என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய மிகச் சிறந்த ஒப்பந்தத்தையே தாம் விரும்புவதாகவும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை எனில், ராணுவ ரீதியான முடிவுகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று கூறிய அவர், வழக்கமான ராணுவ வலிமையாலேயே ஈரானை முழுமையாக முறியடிக்க முடியும் என்று தெளிவுபடுத்தினார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை எவரும் ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது ஈரானின் தலைமை பொறுப்பில் குழப்பம் நிலவுவதாகவும், அந்நாட்டின் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே பூனை-நாய் சண்டையிடுவது போல மோதிக்கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், போர் நிறுத்தக் காலத்தில் ஈரான் ஆயுதக் கிடங்குகளை நிரப்பியிருந்தாலும், அமெரிக்க ராணுவத்தால் அவற்றைச் சுமார் ஒரு நாளுக்குள் முழுமையாக அழித்துவிட முடியும் என்று டிரம்ப் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் திட்டம்: அதிபர் டெல்சி நிராகரிப்பு!
புதன் 13, மே 2026 12:37:18 PM (IST)

அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்; ஈரானிடம் கடற்படையே இல்லை - டிரம்ப் ஆவேசம்!
புதன் 13, மே 2026 11:43:59 AM (IST)

தமிழகம் - மலேசியா உறவு பலப்படும்: விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்து
செவ்வாய் 12, மே 2026 11:57:47 AM (IST)

ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)










