» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மிக நீண்ட போருக்கு ஈரான் தயார்: மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அழைப்பு!
புதன் 4, மார்ச் 2026 5:14:56 PM (IST)

"நாங்கள் ஒரு மிக நீண்ட போருக்கு முழுமையாகத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது நடத்தப்பட்ட தீவிரத் தாக்குதலில், அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா காமேனி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இது குறித்து ஈரானின் பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
"நாங்கள் ஒரு மிக நீண்ட போருக்கு முழுமையாகத் தயாராகிவிட்டோம். போரின் ஆரம்பத்திலேயே எங்களது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல. எதிரிகளிடம் குறிப்பிட்ட அளவு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன என்பது உலகிற்கே தெரிந்த உண்மை," என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்: போர் சூழல் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு அவசர காலப் பயண அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வெளியேற அறிவுறுத்தல்: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள அமெரிக்கக் குடிமக்கள், ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகள் வழியாகவோ அல்லது தற்பொழுது இயக்கப்படும் விமானங்கள் மூலமாகவோ உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பு எச்சரிக்கை: தற்போதைய சூழலில் நில எல்லைகள் திறந்திருப்பதால், பாதுகாப்பாக வெளியேற வாய்ப்புள்ளவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும், வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் தூதரகங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:56:21 AM (IST)

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:07 PM (IST)

நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி வந்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள் : உலக நாடுகள் பாராட்டு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:56:08 AM (IST)

அமெரிக்காவை இனி நம்ப முடியாது! - ஐரோப்பா தனி ராணுவம் அமைக்க ஜெலன்ஸ்கி அழைப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:32:39 PM (IST)

இஸ்ரேல் ஒரு தீய நாடு; மனிதகுலத்திற்கே சாபக்கேடு : பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 12:06:44 PM (IST)

உடன்பாடு எட்டப்படாவிட்டால் இதுவரை கண்டிராத தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 12:48:45 PM (IST)







