» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி மோசடி வழக்கில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். இதனை தொடர்ந்து மத்திய அரசு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வேண்ட்ஸ்வொர்த் சிறையில் 55 வயதான நீரவ் மோடி, அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வங்கி மோசடி தொடர்பாக நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடியை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டன. அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு இருந்தத். இந்த நிலையில்தான், அமெரிக்காவில் நேஹல் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். நேஹல் மோடியை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அமெரிக்கா கைது செய்துள்ளது. நேஹல் மொடி பெல்ஜியம் நாட்டு குடியுரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)
