» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்

ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)

அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்துசெய்ய இந்தியா விரும்புகிறது என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்து செய்ய இந்தியா விரும்புவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வர்த்தகம் செய்வதை ஏறத்தாழ சாத்தியமற்றதாக அவர்கள் ஆக்கி விட்டனர். அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்து செய்ய இந்தியா விரும்புவது உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். ஆனால் நான் அவசரப்படவில்லை. ஒவ்வொரு நாடும் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. தென்கொரியா எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் எல்லா நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. அதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப் போகிறேன். ஒப்பந்தம் செய்ய 150 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதே சமயத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வர்த்தக ஒப்பந்தம் குறித்து தெரிவித்த கருத்து, முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது சிக்கலான ேபச்சுவார்த்தை. எந்த வர்த்தக ஒப்பந்தமும் இருதரப்புக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இதுதான் வர்த்தக ஒப்பந்தம் பற்றிய எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை

இதற்கிடையே, மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோவர்டு லுட்னிக், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் சில வரிச்சலுகைகளை எதிர்பார்க்கின்றன.


மக்கள் கருத்து

SOORIYANமே 18, 2025 - 11:26:21 AM | Posted IP 172.7*****

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஸ்டிக்கர் ஓட்டுவதில் ஆமை செபாஸ்டியன் ஐ விட இவர் மிகவும் சூப்பர் ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education




New Shape Tailors



Thoothukudi Business Directory