» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை!! இனவெறி தாக்குதல்?

செவ்வாய் 27, டிசம்பர் 2011 5:06:15 PM (IST)

இந்தியாவை சேர்ந்தவர் அனுஜ் பிட்வே (23). இவர் இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முதுநிலை படிப்பு படித்து வந்தார். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மான்செஸ்டருக்கு நண்பர்கள், தோழிகளுடன் நேற்று சுற்றுலா சென்றார். 

ஓட்டலில் இருந்து சிட்டி சென்டருக்கு நேற்று காலை அனைவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, 2 வாலிபர்கள் அவர்களிடம் வந்தனர். அவர்களில் ஒருவன் அனுஜ்ஜிடம் சிறிது நேரம் பேசினான். திடீரென தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் அனுஜ்ஜை நெற்றியில் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அனுஜ் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸ் தலைமை சூப்பிரண்டு கெவின் முல்லிகன் கூறுகையில், மாணவர் கொல்லப்பட்டது குறித்து இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் 2 வாலிபர்கள். அவர்களுக்கு 22 வயது இருக்கும். கொலைக்கான பின்னணி தெரியவில்லை. இதில் இனவெறி தாக்குதல் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory