» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை முல்லைத் தீவில் சுனாமி வந்து விட்டதாக பீதி; கடல் சீற்றம்; கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது!
செவ்வாய் 27, டிசம்பர் 2011 2:00:26 PM (IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது இலங்கைக்கு மிக அருகில் உள்ளது. இதனால் இலங்கை வடக்கில் கடலோரப்பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத் தீவில் நேற்று இரவு 9 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டது.
கடல் தண்ணீர் பொங்கி எழுந்து ஊருக்குள் புகுந்தது. செம்மலை, கள்ளப்பாடு, அலம்பில், உடப்புக்குளம் உள்பட ஏராளமான கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்தது. கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான படகுகள் கடல் சீற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. கடல் தண்ணீர் பொங்கி வந்ததால் மீண்டும் சுனாமி வந்து விட்டதாக ஈழத்தமிழர்களிடம் பீதி ஏற்பட்டது.
இதனால் அவர்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவசரம், அவசரமாக வெளியேறினார்கள். பாதுகாப்பான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். சில ஊர்களில் முழங்கால் அளவுக்கு கடல் தண்ணீர் தேங்கியுள்ளது. சுனாமி ஏற்பட்ட 7-வது ஆண்டு நிறைவு நாளில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டதால் முல்லைத்தீவு மக்களிடம் பதற்றமும், பரபரப்பும் விடிய, விடிய நீடித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலியிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்து குப்பை தொட்டியில் விழுந்த வாலிபர்
சனி 19, மே 2012 4:53:17 PM (IST)

அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : பிரதமர், முதல்வருக்கு லண்டன் எம்பிக்கள் கடிதம்
சனி 19, மே 2012 4:13:12 PM (IST)

கனடா நகை கடையில் ஆசாமி விழுங்கிய வைரம்: பேதி மருந்து உதவியுடன் மல்லுக்கட்டும் போலீசார்
வெள்ளி 18, மே 2012 5:04:41 PM (IST)

துர்க்மெனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பாக். வழியாக கேஸ்: அமெரிக்கா வரவேற்பு!!
வெள்ளி 18, மே 2012 4:56:09 PM (IST)

போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின: 4 விமானிகள் பலி;5 பேர் காயம்
வெள்ளி 18, மே 2012 7:11:31 AM (IST)

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருவதாக உலக தங்க நகைகழகம் வருத்தம்
வியாழன் 17, மே 2012 5:42:53 PM (IST)


