» செய்திகள் » வெளிநாடு
Share
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மதக் கலவரத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கலவரம் வெடிப்பதும், பல நூறு பேர் கொல்லப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த வாரம் பிளாட்டு மாநிலத்தில் உள்ள ஜோஸ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடுமையான மத கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர். பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர். இதில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டோகோ நஹவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் தாக்கப்பட்டு பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ளனர். கலவரம் பெரிதாகி வருவதைத் தொடர்ந்து அதை அடக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமையக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருவதாக தற்காலிக அதிபர் குட்லக் ஜொனதான் கூறியுள்ளார். அதிபர் உமரு யார்துவா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதில் குட்லக் ஜொனதான் அதிபர் பதவியைக் கவனித்து வருகிறார்.
நைஜீரியா மதக் கலவரத்தில் 300பேர் பலி: நிலமையை கட்டுப்படுத்த ராணுவம் தீவிர முயற்சி!
செவ்வாய் 9, மார்ச் 2010 10:23:28 AM (IST)
நைஜீரியாவில் ஏற்பட்ட பெரும் மதக் கலவரத்திற்கு 300 பேர் பலி யாகியுள்ளனர். கலவரம் பெரிதாகி வருவதைத் தொடர்ந்து அதை அடக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா மதக் கலவரத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு கலவரம் வெடிப்பதும், பல நூறு பேர் கொல்லப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது.
கடந்த வாரம் பிளாட்டு மாநிலத்தில் உள்ள ஜோஸ் நகரிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் கடுமையான மத கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர். பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர். இதில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டோகோ நஹவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் தாக்கப்பட்டு பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ளனர். கலவரம் பெரிதாகி வருவதைத் தொடர்ந்து அதை அடக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமையக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருவதாக தற்காலிக அதிபர் குட்லக் ஜொனதான் கூறியுள்ளார். அதிபர் உமரு யார்துவா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதில் குட்லக் ஜொனதான் அதிபர் பதவியைக் கவனித்து வருகிறார்.
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு: 50 பேர் பலி
வியாழன் 29, ஜூலை 2010 4:24:13 PM (IST)

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்
வியாழன் 29, ஜூலை 2010 1:05:35 PM (IST)

தாலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்: பயணிகள் பஸ் தகர்ந்து 20 பேர் பலி
புதன் 28, ஜூலை 2010 3:44:59 PM (IST)

ஆக்டோபஸ் விஷத்திலிருந்து மருந்து தயாரிப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புதன் 28, ஜூலை 2010 12:49:40 PM (IST)

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்
புதன் 28, ஜூலை 2010 12:44:53 PM (IST)

விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
புதன் 28, ஜூலை 2010 12:12:28 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பு: வட கொரியா மீது பொருளாதாரத் தடை
புதன் 28, ஜூலை 2010 10:56:38 AM (IST)

இந்து கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 இஸ்லாமியர்களுக்கு அபராதம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:54:52 PM (IST)

மின்சார இறக்குமதி: இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்பந்தம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:18:29 PM (IST)

ஓட்டப்பயிற்சி செய்தால் உடல் எடை கூடும்: பயிற்சியாளர் தகவல்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:56:56 AM (IST)

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பெங்களூரு வருகை
செவ்வாய் 27, ஜூலை 2010 11:46:31 AM (IST)

14 ஆயிரம் பேரை கொன்று குவித்த முன்னாள் சிறைத்தலைவருக்கு 35 ஆண்டு ஜெயில்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:19:36 AM (IST)