» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எச்எஸ்பிசி வங்கி இரகசியக் கணக்குகளில் கருப்புப் பணம்: 100 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்!!
புதன் 21, டிசம்பர் 2011 3:33:59 PM (IST)
ஜெனிவாவில் இயங்கிவரும் ஹாங்காங் அண்டு ஷாங்காய் வங்கியில் இரகசிய கணக்குகளில் பணம் போட்டு வைத்திருக்கும் 100 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை விளக்கம் அளிக்குமாறு கோரி தாக்கீது அனுப்பியுள்ளது.
இவர்கள் அனைவரும் மும்பையைச் சேர்ந்தவர்களாவர். சில மாதங்களுக்கு முன்னர் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கும் 700 பேர்களின் பட்டியலை பிரான்ஸ் அரசு இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அவர்களில் மும்பையைச் சேர்ந்தவர்கள் 200 பேரென்றும், அவர்களில் 100 பேருக்கு இப்போது வருமான வரித்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.
அயல் நாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகள் வைத்து கருப்புப் பணத்தை போட்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கீது அனுப்புமாறு வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அளித்த உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த 100 பேர் பட்டியலில் மும்பையின் பெரு நிறுவனங்கள் சிலவற்றின் பெயரும் உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியலில் உள்ளவர்களில் சிலர், தாங்களாகவே முன்வந்து தங்களுடைய இரகசிய கணக்கு விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும், அவர்களின் மும்பையின் முன்னணி தொழிலகக் குடும்பமும் ஒன்று என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் குடும்பத்தின் அறக்கட்டளையின் பெயரில் ரூ.300 கோடி இரகசியக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சட்டப் பிரிவு 148இன் கீழ் இந்த தாக்கீதுகள் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலியிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்து குப்பை தொட்டியில் விழுந்த வாலிபர்
சனி 19, மே 2012 4:53:17 PM (IST)

அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : பிரதமர், முதல்வருக்கு லண்டன் எம்பிக்கள் கடிதம்
சனி 19, மே 2012 4:13:12 PM (IST)

கனடா நகை கடையில் ஆசாமி விழுங்கிய வைரம்: பேதி மருந்து உதவியுடன் மல்லுக்கட்டும் போலீசார்
வெள்ளி 18, மே 2012 5:04:41 PM (IST)

துர்க்மெனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பாக். வழியாக கேஸ்: அமெரிக்கா வரவேற்பு!!
வெள்ளி 18, மே 2012 4:56:09 PM (IST)

போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின: 4 விமானிகள் பலி;5 பேர் காயம்
வெள்ளி 18, மே 2012 7:11:31 AM (IST)

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருவதாக உலக தங்க நகைகழகம் வருத்தம்
வியாழன் 17, மே 2012 5:42:53 PM (IST)


