» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் கனமழை, வெள்ளத்தில் 2¼ லட்சம் மக்கள் பாதிப்பு : 4 பேர் உயிரிழப்பு!

வியாழன் 28, நவம்பர் 2024 12:37:16 PM (IST)



இலங்கையில் கனமழை, வெள்ளத்தால் 2¼ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைகள் உட்பட4 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதனால், 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை வெள்ளத்தில் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory