» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு : டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

புதன் 27, நவம்பர் 2024 10:36:54 AM (IST)

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக ஊடகமான ‘ட்ரூத்’தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், வரும் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்த மூன்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவது நிற்கும்வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதைத் தடுத்து நிறுத்த அந்த நாடுகளால் முடியும். அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை சீனா தடுக்கும் வரை அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதும் 10 சதவீதம் கூடுதல் வரி சுமத்தப்படுவதாக டிரம்ப் கூறினார்.

இந்த அறிவிப்புக்கு மூன்று நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இத்தகைய நடவடிக்கைகள் தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரை உருவாக்கும் என்று எச்சரித்துள்ள சீனா, அந்தப் போரில் யாரும் வெற்றி பெறமுடியாது என்று கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory