» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காதலுக்கு எதிர்ப்பு: தாய், தந்தை உள்ளிட்ட 13 பேரை விஷம் வைத்து கொன்ற பெண்!

திங்கள் 7, அக்டோபர் 2024 11:16:58 AM (IST)

பாகிஸ்தானில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சப்பாத்தியில் விஷம் கலந்து தாய், தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த இளம்பெண், வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார். 

இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory