» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் : ரஷியர்களுக்கு அதிபர் புதின் வேண்டுகோள்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 12:15:08 PM (IST)

ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷியர்களுக்கு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷியாதான். 1990 களில் இருந்தே ரஷியாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

ரஷியா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ரஷியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷிய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் ரஷியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் குறித்து புதின் கவலை அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிசியாக இருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. 

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ரஷிய அதிபர் புதின் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஷியாவில், 2023 ஜன., 1 நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் தொகை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory