» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச அளவில் போர் - பெருந்தொற்று அபாயம் : பில்கேட்ஸ் எச்சரிக்கை!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:28:35 PM (IST)

சர்வதேச அளவில் போர் மற்றும் பெருந்தொற்று ஏற்படக்கூடும் என மைக்ரோசாப்ட் நிறுவனரும், நன்கொடையாளருமான பில்கேட்ஸ் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இன்றைய உலகில் சில இடங்களில் ஏற்பட்டு உள்ள பதற்றமானது மற்றொரு பெரிய போருக்கு வழிவகுக்கக்கூடும். ஒரு வேளை இதனை நாம் தவிர்க்க முயன்றாலும், மற்றொரு பெருந்தொற்று ஏற்படலாம். இது, அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படக்கூடும். உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கோவிட் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தாலும், அது நாம் எதிர்பார்த்ததை விடக்குறைவு.

எதில் நாள் அதிகம் கற்றுக் கொண்டோம். எங்கு பிரச்னை உள்ளது என்பதை நமது செயல்பாடுகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஒரு வேளை இது அடுத்த 5 ஆண்டுகளில் இது மேம்படும். ஆனால், இதுவரை அது இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது. உலகத்தை வழிநடத்தும் மற்றும் முன்மாதிரியாக இருக்கும் என அமெரிக்கா மீது எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதற்கேற்ப அந்நாடு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory