» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு: ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
வியாழன் 5, செப்டம்பர் 2024 10:41:09 AM (IST)

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
புரூனே நாட்டுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்றி, அந்த நாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சரும் தமிழ் வம்சாவளியுமான கே. சண்முகம் நேரில் சென்று வரவேற்றார்.
இந்த நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சிங்கப்பூருக்கு 2018-க்கு பிறகு ஐந்தாவது முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக சென்றுள்ளார். முன்னதாக, 3-வது முறையாக பதவியேற்ற பிறகு ரஷியா, உக்ரைன், புரூனே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிராகன் விண்கலம் மூலம் 9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
புதன் 19, மார்ச் 2025 10:09:07 AM (IST)

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 404 பேர் பலி
புதன் 19, மார்ச் 2025 8:38:32 AM (IST)

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம்: உக்ரைன் உறுதி!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:43:26 PM (IST)

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 35 பேர் உயிரிழப்பு; மீட்புப்பணிகள் தீவிரம்!
திங்கள் 17, மார்ச் 2025 5:47:47 PM (IST)

கனடாவின் மார்க் கார்னியின் அமைச்சரவையில் 2 இந்திய பெண்களுக்கு வாய்ப்பு
திங்கள் 17, மார்ச் 2025 12:25:02 PM (IST)

வெற்றிகரமாக சென்றடைந்தது குரூ டிராகன்: பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
திங்கள் 17, மார்ச் 2025 9:02:42 AM (IST)
