» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கமலா ஹாரிஸ் குறித்து டிரம்பின் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 12:25:43 PM (IST)



அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டொனால்டு டிரம்ப் பேசியதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. 

சிகாகோவில் நடைபெற்ற தேசிய கறுப்பின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு டிரம்பிடம் கறுப்பின வாக்காளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் பேசியதாவது: "கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். ஆனால், தற்போது தன்னை கறுப்பராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

அதனால், அவர் கறுப்பரா? அல்லது இந்தியரா? என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் நான் மதிக்கிறேன். ஆனால், அவர் வெளிப்படையாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

டிரம்பின் பேச்சுக்கு உடனடியான கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது: ”ஒரு கறுப்பின பெண்ணாக உங்கள் முன், உங்களுக்குன் போட்டியாக நிற்கிறார். இதுபோன்ற பேச்சு அவமானகரமானது. ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காட்டுகிறார் என்பதை பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது அவரது சொந்த முடிவு. கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும். அமெரிக்காவின் துணை அதிபருக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

ஜமைக்கா நாட்டை பூர்விகமாக கொண்ட தந்தைக்கும், இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாய்க்கு அமெரிக்காவில் பிறந்தவர் கமலா ஹாரிஸ்.ஜமைக்கா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று டிரம்ப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory