» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் அமெரிக்க இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்!

சனி 16, செப்டம்பர் 2023 5:09:34 PM (IST)இங்கிலாந்தில் அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி வகை நாய்களுக்கு தடை விதிக்க பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டு உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி இன நாய்கள் நம்முடைய சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்த கூடியவை என தெளிவாக தெரிகிறது.

இதனை வரையறை செய்து, தடை செய்ய உடனடி வேலைகளை மேற்கொள்ளும்படி நான் உத்தரவிட்டு உள்ளேன். அதனால், இந்த வன்முறை தாக்குதல்களுக்கு முடிவு ஏற்படுத்தி, மக்களை பாதுகாப்பாக வைக்கலாம் என்று தெரிவித்து உள்ளார். இந்த விசயம், நாய்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் தொடர்புடையவை அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இது, அவை நடந்து கொள்ளும் முறையை சார்ந்தது. அதனை இப்படியே விடமுடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்த இன நாய்கள் மிக ஆபத்து நிறைந்தவை. ஆபத்து விளைவிக்கும் நாய்கள் சட்டத்தின் கீழ் இந்த இன நாய்களை அரசு தடை விதிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவுக்கு உடனடியாக நெட்டிசன்கள் பலர் வருத்தம் தெரிவித்து உள்ளனர். வீடியோ பகிரப்பட்டு சில மணிநேரங்களில், அது வைரலானது. ஒரு சிலர் பிரதமரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory