» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் அடுத்தடுத்து 3 இடங்களில் துப்பாக்கிசூடு : உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு
செவ்வாய் 24, ஜனவரி 2023 10:30:56 AM (IST)
அமெரிக்காவில் அடுத்தடுத்து 3இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே ஹாப்மூன் பே பகுதியில் 2 இடங்களில் துப்பாக்கிசூட்டில் 7- பேர் உயிரிழந்து 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இயோவோ பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அடுத்தடுத்த நடைபெற்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:20:56 AM (IST)

காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் : ஜஸ்டின் ட்ரூடோ
வியாழன் 30, நவம்பர் 2023 5:10:21 PM (IST)

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!
புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)

நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் வரவேற்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:17:45 AM (IST)
