» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகை கிடையாது : இங்கிலாந்து அமைச்சர் திட்டவட்டம்
திங்கள் 23, ஜனவரி 2023 10:26:42 AM (IST)
தடையற்ற வர்த்தகத்தினால் இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகை அளிக்கப்படாது என்று இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் 6வது சுற்று பேச்சுவார்த்தைக்காக இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் கெமி படேனோச் கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை அவர் சந்தித்து பேசினார். இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் கெமி படேனோச் அளித்த பேட்டியில், "ஆஸ்திரேலியா உடனான இங்கிலாந்தின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா உடனான ஒப்பந்தமும் ஒரே மாதிரியானவை. வர்த்தக நடவடிக்கையில் இந்தியாவுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.
ஆனால், விசா விவகாரத்தை பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட்டதை போல், 35 வயதுக்குட்பட்டவர்கள் 3 ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் தங்கவும், பணியாற்றவும் அனுமதிக்கப்படும். இந்தியா-இங்கிலாந்து இடையேயான இளம் தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ், இரு நாடுகளிலும் அந்நாடுகளை சேர்ந்த 18-30 வயதுடைய பட்டதாரிகள் 2 ஆண்டுகள் மட்டும் தங்கவும் பணியாற்றவும் ஆண்டுக்கு 3,000 பேருக்கு விசா வழங்கப்படும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதால் இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகைகள் வழங்கப்பட மாட்டாது," என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உளவு பலூன் விவகாரம் : சீனாவுக்கு அமெரிக்க கடும் கண்டனம்!
சனி 4, பிப்ரவரி 2023 11:04:47 AM (IST)

தைவானை அச்சுறுத்த போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய சீனா - பதற்றம் நீடிப்பு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:35:07 PM (IST)

ஈரானில் நினைவு சின்னம் முன் நடனமாடிய காதல் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:18:37 PM (IST)

கோடிகளில் போனஸ் கொடுத்த சீன நிறுவனம் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!
புதன் 1, பிப்ரவரி 2023 12:31:13 PM (IST)

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயக்கம்
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:18:53 PM (IST)

பாக்.மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 83பேர் உயிரிழப்பு - 150பேர் படுகாயம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:03:22 PM (IST)
