» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது: ஜெர்மனி பாராட்டு!

திங்கள் 5, டிசம்பர் 2022 10:39:41 AM (IST)

உள்நாட்டில் பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்  அன்னாலெனா பேர்பாக் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன். ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.

இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும். வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது. உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி.இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory