» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது: இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து வழங்கினார்!
சனி 3, டிசம்பர் 2022 12:20:01 PM (IST)

பத்ம பூஷண் விருது வழங்கிய இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
கூகுள், ஆல்ஃபபெட் இங்க் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டிருந்தது. அந்த விருதை அவர் நேரில் பெற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால், விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, சுந்தர் பிச்சையிடம் வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, "இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை சேர்த்துள்ளீர்கள். என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்தியா எனது ஓர் அங்கம். நான் எங்கு சென்றாலும் அந்த அடையாளத்தை எடுத்துச் செல்கிறேன்.
என் குடும்பத்தினர் கற்றலுக்கும் ஞானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். நான் எனது வாய்ப்புகளைத் தேடிப் பயணிக்க என் பெற்றோர் நிறைய தியாகம் செய்தனர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி" என்றார். இந்த விருது வழங்கும்போது சான் ஃப்ரான்சிஸ்கோ தூதரகத்தின் அதிகாரி டிவி நாகேந்திர பிரசாத் இருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உளவு பலூன் விவகாரம் : சீனாவுக்கு அமெரிக்க கடும் கண்டனம்!
சனி 4, பிப்ரவரி 2023 11:04:47 AM (IST)

தைவானை அச்சுறுத்த போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய சீனா - பதற்றம் நீடிப்பு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:35:07 PM (IST)

ஈரானில் நினைவு சின்னம் முன் நடனமாடிய காதல் ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:18:37 PM (IST)

கோடிகளில் போனஸ் கொடுத்த சீன நிறுவனம் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!
புதன் 1, பிப்ரவரி 2023 12:31:13 PM (IST)

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயக்கம்
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:18:53 PM (IST)

பாக்.மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 83பேர் உயிரிழப்பு - 150பேர் படுகாயம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:03:22 PM (IST)
