» செய்திகள் - விளையாட்டு » உலகம்

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி!

வியாழன் 29, செப்டம்பர் 2022 12:21:49 PM (IST)அமெரிக்காவில்  முற்றிலும் மின்சார ஆற்றலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. 

அமெரிக்காவில் ஏவியேஷன் ஏர் கிராப் என்ற நிறுவனம் முற்றிலுமாக பேட்டரியால் இயங்கும் வகையில் விமானம் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. ஆலிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. வாஷிங்டனில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த மின்சார விமானம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பறந்தது. சுமார் 8 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்த ஆலிஸ் மின்சார விமானம், 3,500 அடி உயரத்தை எட்டிய பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியது.

மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் விமானத்தை இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. மின்சார ஆற்றலில் இயங்குவதால் இந்த விமானம் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்று விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பயிற்சியின் போது விமானத்தில் பதிவான விவரங்களை பொறியாளர்கள் குழு ஆய்விட்டு வருகிறது. 240 முதல் 400 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் வகையில் ஆலிஸ் விமானம் உருவாக்கப்பட்டிருப்பதாக ஏவியேஷன் ஏர் கிராப் நிறுவனம் கூறியுள்ளது. இன்னும் பல்வேறு சோதனைகள் செய்யப்பட இருப்பதால் இந்த விமானம் பயன்பாட்டுக்கு வர ஒருசில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory